தமிழ்நாடு

'வெற்றிப்பாதையில் திருப்பூர்' இன்று நடக்குது 'மெகா' கருத்தரங்கு : தொழில்துறையினரே, மிஸ் பண்ணாதீங்க

Updated : பிப் 08, 2020 | Added : பிப் 08, 2020
Share
Advertisement
 'வெற்றிப்பாதையில் திருப்பூர்' இன்று நடக்குது 'மெகா' கருத்தரங்கு : தொழில்துறையினரே, மிஸ் பண்ணாதீங்க

திருப்பூர்,;பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டும், 'வெற்றிப்பாதையில் திருப்பூர் -- 2020', வேலாயுதசாமி மண்டபத்தில் இன்று நடக்கிறது; தொழில்முனைவோர் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பின்னலாடை துறையை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் வகையிலும், தொழில்முனைவோருக்கு தன்னம்பிக்கை, உற்சாகம் அளிக்கும்வகையிலும், வெற்றிப்பாதையில் திருப்பூர் நிகழ்ச்சி, நடத்தப்படுகிறது.
ஐந்தாவது முறையாக, இந்நிகழ்ச்சி, தாராபுரம் ரோட்டில் உள்ள வேலாயுதசாமி மண்டபத்தில் இன்று மாலை, 3:30 மணிக்கு நடைபெற உள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், நிப்ட்--டீ கல்லுாரி, ஸ்ரீபுரம் அறக்கட்டளை, தொழில்பாதுகாப்புக்குழு மற்றும் அனைத்து சங்கங்களும் இணைந்து நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சியில், தொழில் முனைவோருடன் 'தினமலர்' நாளிதழும் கரம் கோர்த்துள்ளது.ஆடை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனை கூறும் கருத்தரங்கம்; சிறப்பு விருந்தினர் பங்கேற்கும் நிகழ்வு என, இரண்டு பிரிவாக நடக்கிறது.மாலை, 3:30 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில், திறன் மிகு திருப்பூர்; அடல் இன்குபேஷன் மையத்தின் புதுவகை ஆடை தயாரிப்பு; தொழில் வளர்ச்சியில் நிப்ட்--டீ கல்லுாரியின் பங்களிப்பு குறித்த ஒலி- ஒளி காட்சி நடத்தப்படும்.மாலை, 4:00 மணிக்கு துவங்கும் கருத்தரங்கில், வசீர் ஆலோசனை நிறுவன வர்த்தக இயக்குனர் சுரேந்தர் ஜெய்ன் பங்கேற்று, செயற்கை நுாலிழை ஆடைகளுக்கான வர்த்தக வாய்ப்புகள்; போட்டி நாடுகளின் ஆடை உற்பத்தி துறையுடன் ஒப்பீடு என்கிற தலைப்பில் பேசுகிறார்.அதன்பின், டில்லி ராஜேஸ்பேடா ஆலோசனை நிறுவன இயக்குனர் ராஜேஷ்பேடா, ஆடை உற்பத்தி மேலாண்மை குறித்தும், புதுமை டிசைன் உருவாக்கம் மூலம் வர்த்தகத்தை கைப்பற்றுவது குறித்து, பின்னலாடை துறை ஆலோசகர் சபரி கிரீஷ், குறுகிய காலத்துக்குள் ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்யும் நுணுக்கங்கள் குறித்து, ஸ்டிங் சோர்ஷிங் நிறுவன இயக்குனர் சுபாஷ் தனஞ்செயன் பேசுகின்றனர்.மாலை, 6:30 மணிக்கு துவங்கும் இரண்டாவது நிகழ்வில், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் தலைமை வகித்து பேசுகிறார்.
முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி பாரி, தன்னம்பிக்கை உரையாற்று கிறார்.நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, புதுவகை ஆடைகள், துணி ரகங்கள், அக்சசரீஸ்களை காட்சிப்படுத்தும் கண்காட்சியும் நடைபெறுகிறது.தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் வெற்றிப்பாதையில் திருப்பூர் நிகழ்ச்சியில், ஆடை உற்பத்தி, ஜாப் ஒர்க் நிறுவன உரிமையாளர்கள், மேலாளர்கள் அனைவரும் பங்கேற்கவேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பங்கேற்க விரும்புவோர், http://bit.iy/373nF97 என்கிற முகவரியில் சென்று, வருகைப்பதிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அனுமதி இலவசம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X