பொது செய்தி

தமிழ்நாடு

தைப்பூச தேர்த்திருவிழா இன்று தேரோட்டம்

Added : பிப் 08, 2020
Share
Advertisement

திருப்பூர்:மலைக்கோவில், ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவில், இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.மங்கலம் அடுத்த, மலைக்கோவில் ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும், காலை மற்றும் மாலை, சுவாமி கிரிவலம் நிகழ்ச்சியும், 6ம் தேதி, முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று மாலை, 6:00 மணிக்கு, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. தொடர்ந்து, இரவில், யானை வாகனத்தில் சென்று அருள்பாலித்தனர்.இன்று காலை, 6:00 மணிக்கு, ஸ்ரீவிநாயகர் தனித்தேரிலும், ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவில், வள்ளி தெய்வானையுடன், ரதம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது.மாலை, 3:00 மணிக்கு, தேர் வடம் பிடித்தல் மற்றும் கிரிவலமாக செல்லும் தேரோட்டம் நடக்கிறது. நாளை, பரிவேட்டை, குதிரை வாகன பவனியும், 10ம் தேதி மகா தரிசனமும், 11ம் தேதி மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெறுகிறது.இதேபோல், சிவன்மலை, சென்னிமலை, கதித்தமலை, அலகுமலை உட்பட முருகப்பெருமான் கோவில்களிலும், தைப்பூச தேரோட்டம் இன்று நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X