பொது செய்தி

தமிழ்நாடு

'ஜி.எஸ்.டி., பதிவு செய்ய தவறாதீர்!' கருத்தரங்கில் அறிவுறுத்தல்

Added : பிப் 08, 2020
Advertisement

திருப்பூர்:ஜி.எஸ்.டி., பதிவு செய்ய தவறக்கூடாது என, புதிய தொழில்முனைவோருக்கு பயிற்சியாளர் அறிவுறுத்தினார்.திருப்பூர் பல்லடம் ரோடு, ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில், புதிய தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம் நேற்று நடந்தது.பயிற்சியாளர் ஜெயக்குமார் பேசியதாவது:புதிதாக தொழில் துவங்குவோர், முதலில் என்ன தொழிலில் ஈடுபடப்போகிறோம் என்பதை முடிவு செய்யவேண்டும். எந்த பொருளை உற்பத்தி அல்லது விற்பனை செய்வது. உற்பத்தியாளர், வர்த்தகர், உள்நாட்டு வர்த்தகர், ஏற்றுமதியாளர் என விரும்பும் துறையை தேர்வு செய்யவேண்டும்.'பான்' கார்டு பெற்று, ஜி.எஸ்.டி., பதிவு செய்வது மிகவும் அவசியம். ஏற்றுமதியில் ஈடுபட விரும்புவோர், ஐ.இ., கோர்டு (இம்போர்ட் எக்ஸ்போர்ட் கோர்டு) பெறவேண்டும். உற்பத்தியாளர்கள், உத்யோக் ஆதார் பெற வேண்டும்.மத்திய அரசு, ஏற்றுமதியாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்குகிறது. முதலீட்டு மானியங்களும் கிடைக்கின்றன. நேர்மையான உற்பத்தியாளர், வர்த்தகராக திகழ்வதற்கு மட்டுமின்றி, அரசு சலுகைகளை பெறுவதற்கு, ஜி.எஸ்.டி., பதிவு கட்டாயமாகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X