பொது செய்தி

தமிழ்நாடு

ஒவ்வொரு வார்டிலும், ரூ.15 லட்சத்தில் வளர்ச்சிப்பணி: ஒன்றியக்குழு கூட்டத்தில் தகவல்

Added : பிப் 08, 2020
Advertisement
 ஒவ்வொரு வார்டிலும், ரூ.15 லட்சத்தில் வளர்ச்சிப்பணி: ஒன்றியக்குழு கூட்டத்தில் தகவல்

அவிநாசி:அவிநாசி ஊராட்சி ஒன்றிய குழுவின் முதல் கூட்டம், ஆர்ப்பாட்டமின்றி நடந்து முடிந்தது.அவிநாசி ஊராட்சி ஒன்றிய குழுவின் முதல் கூட்டம், ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நேற்று மாலை நடந்தது. ஒன்றிய குழு தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். பி.டி.ஓ., ஹரிஹரன் முன்னிலை வகித்து, உறுப்பினர்களின் உரிமை, கடமை குறித்து விளக்கினார்.கூட்டத்தில் நடந்த விவாத தொகுப்பு:முத்துசாமி (மா.கம்யூ): கணியாம்பூண்டிக்கு, மேட்டுப்பாளையம் மற்றும் எல் அண்டு டி குடிநீர் திட்டத்தின் கீழ், வினியோகிக்கப்பட்ட தண்ணீர் தடைபட்டுள்ளது; மக்கள் சிரமப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ஏ.டி. காலனியில் சாக்கடை வசதி இல்லை.தலைவர்: சம்பந்தப்பட்ட துறை கவனத்துக்கு தண்ணீர் பிரச்னையை கொண்டு சென்று, தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும்.சேதுமாதவன் (தி.மு.க.,): பழங்கரை ஊராட்சியில் கடந்த, 15 ஆண்டுக்கு முன் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் தான், தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது, மக்கள் தொகை, 10 மடங்கு அதிகரித்துவிட்டது. அதற்கேற்ப தண்ணீர் வினியோகிக்க வேண்டும். பெரியாயிபாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, இடம் தேர்வு செய்யப்பட்டும், பணி துவக்க காலம் தாழ்த்துகின்றனர்.தலைவர்: பழங்கரை ஊராட்சியை மையப்படுத்தி, புதிய குடிநீர் திட்டப்பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி நிறைவு பெறும்பட்சத்தில், தண்ணீர் தேவை தன்னிறைவு பெறும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக, சபாநாயகர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.கார்த்திகேயன் (சுயே.,): அவிநாசிலிங்கம்பாளையத்தில், விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக மோசமாக உள்ள ரங்கா நகர் ரோட்டை பராமரிக்க வேண்டும்.லோகநாதன் (அ.தி.மு.க.): ராமநாதபுரம் ஊராட்சியில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. அங்குள்ள அரசுப்பள்ளி அருகேயுள்ள கிணற்றுக்கு மேல் மூடி போட வேண்டும்.சித்ரகலா (சுயே.,): தெக்கலூரில் ரேஷன் கடை அமைக்க வேண்டும். ஏரிப்பாளையம் நீர்த்தேக்கத் தொட்டி மோசமான நிலையில் உள்ளது.கவுன்சிலர்களின் விவாதங்களை தொடர்ந்து, 30க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தின் நிறைவில், ''ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கும், 15 லட்ச ரூபாய் மதிப்பில் பணி மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் வார்டுக்குட்பட்டு முக்கிய பணிகளின் பட்டியலை வழங்குமாறு, "ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகதீசன் கூறினார். முதல் கூட்டத்திலேயே, 15 லட்சம் ரூபாய் பணி செய்ய வாய்ப்பு கிடைத்ததால், உறுப்பினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X