விதிமுறைகளை மீறி வாகனங்கள் நிறுத்தம்: நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு

Added : பிப் 08, 2020
Advertisement
 விதிமுறைகளை மீறி வாகனங்கள் நிறுத்தம்: நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு

உடுமலை:உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தளி ரோடு பிரிகிறது. நகரின் மையப்பகுதியிலும், திருமூர்த்திமலை, அமராவதி மற்றும் கேரளா மூணாறு செல்லும் வாகனங்களுக்கு பிரதான வழித்தடமாகவும், தளி ரோடு அமைந்துள்ளது.இதனால், இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். ரோட்டின் வணிக நிறுவனங்கள், கடைகள் அதிகளவு அமைந்துள்ளன. கடைகளுக்கு வரும் வாகனங்கள், ரோட்டை ஒட்டி, இருபுறங்களிலும் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்பட்டு வந்தது.இதையடுத்து, போக்குவரத்து போலீஸ் சார்பில், தளி ரோட்டின் இருபுறங்களிலுல், கார் மற்றும் சரக்கு வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது. அவ்வாகனங்களை குட்டைத்திடலில், நிறுத்திச்செல்லவும், அறிவிப்பு வெளியிடப்பட்டு, தகவல் பலகைகளும் வைக்கப்பட்டன.இந்த நடைமுறை, சில மாதங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. தற்போது, விதிமுறைகளை மீறி, தளி ரோட்டின் இருபுறங்களிலும், வாகனங்களை தாறுமாறாக நிறுத்துகின்றனர்.இதனால், காலை, மாலை நேரங்களில், அந்த ரோட்டில் நெரிசல் அதிகரித்து, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வரை அணிவகுத்து நின்று, சந்திப்பு சிக்னலிலும், குழப்பம் ஏற்படுகிறது. திருமூர்த்திமலை, அமராவதி உட்பட வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் வரவும், அங்கிருந்து கிராமங்களுக்குச்செல்லவும், தளி ரோட்டையே பயன்படுத்த வேண்டும்.இந்நிலையில், விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால், பஸ்களும் நெரிசலில் சிக்கி, குறித்த நேரத்துக்கு செல்ல முடியாத நிலை உருவாகிறது. எனவே, போக்குவரத்து போலீசார், நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து, ரோட்டிலுள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; தளி ரோட்டில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X