பொது செய்தி

தமிழ்நாடு

பெண்கள் மீதான பாலியல் குற்றம் அதிகரிப்பு : பெற்றோர் மத்தியில் அச்சம்: விழிப்புணர்வு அவசியம்

Added : பிப் 08, 2020
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் இளம்பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வருவது தொடர்வதால், பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது.கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட, தனியார் பள்ளிகளில், ஆயிரக்கணக்கான மாணவியர் படிக்கின்றனர்.
பெரும்பாலும், கிராமப்புறங்களில் இருந்து, நகரப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வரும் மாணவியரின் எண்ணிக்கை, அதிகமாக உள்ளது.அதில், சிலர், பெற்றோரையும், சமூகத்தையும் அலட்சியம் படுத்தும் விதமான தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கீழ் கோத்தகிரி பகுதியில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், மூன்று இளைஞர்கள், பெண்களை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்குகள் பதிவாகி, இருவர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.இத்தகைய குற்றங்களில், மாணவியரை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்களால், நாள்தோறும் மாணவியரை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், தங்களது மகள் வீடு திரும்பும் வரை, அச்சத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.நன்றாக படித்து பெற்றோரையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, பள்ளி மாணவ மாணவியருக்கு உள்ளது. அதே நேரத்தில், பெற்றோர்; ஆசிரியர் மாணவ, மாணவியருக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
முன்னாள் ஆசிரியர் ராஜூ கூறுகையில்,''பள்ளிகளில் காவல்துறை மற்றும் தன்னார்வ அமைப்பினர் சார்பில், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்தும்,'போக்சோ' சட்டத்தின் அம்சங்கள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பெற்றோர் மாணவ, மாணவியருக்கு சிறு வயதிலேயே 'மொபைல்' போன் வாங்கி வழங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும், தங்களது பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். அவர்களின் நண்பர்கள் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். அப்போது தான், இது போன்ற தவறுகளை கட்டுப்படுத்த முடியும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X