இந்தியா

புதுச்சேரி மாவட்ட வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சியினரிடம் வழங்கல்

Updated : பிப் 08, 2020 | Added : பிப் 08, 2020
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரி மாவட்ட வாக்காளர் பட்டியலை, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம், கலெக்டர் வழங்கினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், 2020ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணிகள், கடந்த டிசம்பர் 16ம் தேதி துவங்கி, கடந்த மாதம் 15ம் தேதி வரை நடந்தது. இதனடிப்படையில், இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி, மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய புதுச்சேரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் அருண், புதுச்சேரி மாவட்ட வாக்காளர் பட்டியலை, அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் விக்ரந்தராஜா அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். குடிமைப்பொருள் வழங்கல் துறை துணை இயக்குனர் ரேவதி, துணை வாக்காளர் பதிவு அதிகாரிகள் பொய்யாதமூர்த்தி, முத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இறுதி வாக்காளர் பட்டியலில் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளில் 72,549 ஆண் வாக்காளர்கள்; 84,185 பெண் வாக்காளர்கள், 17 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1,56,751 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.


பொதுமக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல்



கலெக்டர் அருண் கூறும்போது, 'புதுச்சேரி மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 19 ஆயிரத்து 63 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள்-3 லட்சத்து 86 ஆயிரத்து 860; பெண்கள்-4 லட்சத்து 32 ஆயிரத்து 121. மூன்றாம் பாலினத்தவர் -82.பழைய வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது, 1.48 சதவீதம் அளவுக்கு வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் அந்தந்த தொகுதிக்குட்பட்ட ஓட்டுச் சாவடிகளில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் விபரங்களை சரி
பார்த்துக் கொள்ளலாம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X