இந்தியா

புதுச்சேரி அரசின் பிணைய பத்திரம் ஏலம்

Added : பிப் 08, 2020
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரி அரசு ரூ.100 கோடி மதிப்புள்ள 8ஆண்டு கால பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முன்வந்துள்ளது.

இதுகுறித்து நிதி துறை செயலர் அசோக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசு, ரூ.100 கோடி மதிப்புள்ள எட்டு ஆண்டு கால பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முன்வந்துள்ளது.இந்த பிணைய பத்திரங்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்திற்கும், அதன் மடங்குகளிலும் ஏலம் விடப்படும்.இந்த ஏலம், வரும் 11ம் தேதி மும்பையில் உள்ள
இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடக்கிறது.

ஆர்வமுள்ளவர்கள், நிறுவனங்கள், கூட்டமைப்பு குழுமங்கள், நிதி நிறுவனங்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனங்கள் பொறுப்புரிமை நிதியங்கள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள் கூட்டு போட்டியில்லாத ஏலத்தை மின்னணு முறையில் பேசி முடிவு செய்து பங்கேற்கலாம்.இந்த பிணைய பத்திரங்களுக்கு ஆகஸ்ட் 12 மற்றும் பிப்ரவரி 12 ம்தேதிகளில் ஆறு மாதத்திற்கொரு முறை வட்டி வழங்கப்படும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X