இந்தியா

முன்விரோத தகராறு: 4 பேருக்கு கத்தி குத்து

Added : பிப் 08, 2020
Advertisement

பாகூர்:நான்கு பேரை கத்தியால் குத்திய ரவுடி உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

இருளஞ்சந்தை வ.உ.சி., நகரை சேர்ந்தவர் சந்திரகுமார் மகன் சித்தார்த் 20; குருவிநத்தம் பாரதி நகரை சேர்ந்த ஸ்ரீதர் 22; இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் சித்தார்த் தனது நண்பர் குமாருடன் பாகூருக்கு சென்றார். குருவிநத்தம் துாக்குபாலம் அருகே ஸ்ரீதருடன் நின்றிருந்த அவரது நண்பரான பாகூரை சேர்ந்தரவுடிராஜேஷ் 26; சித்தார்த்தை வழி மறித்து, ஸ்ரீதரிடம் பிரச்னை செய்யக்கூடாது என மிரட்டினார்.

இதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். ஆனால், ஆத்திரம் தீராத ராஜேஷ் தனது நண்பர்கள்ஸ்ரீதர், ரமேஷ், அய்யனார்ஆகியோருடன் சென்று வீடு புகுந்து சித்தார்த் மற்றும் அவரது நண்பர் குமாரையும் கத்தியால் குத்தினார். தடுக்க முயன்ற தனது நண்பர்களான ரமேஷ், அய்யனார்ஆகியோரையும் கத்தியால் குத்தவிட்டு தப்பி சென்றார்.

டுகாயமடைந்த நான்கு பேரும் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து ராஜேஷ், ஸ்ரீதர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X