புதுச்சேரி, காரைக்காலில் நெல் கொள்முதல் மையம்: வைத்திலிங்கம் வலியுறுத்தல்| Dinamalar

இந்தியா

புதுச்சேரி, காரைக்காலில் நெல் கொள்முதல் மையம்: வைத்திலிங்கம் வலியுறுத்தல்

Added : பிப் 08, 2020
Share

புதுச்சேரி:'புதுச்சேரி, காரைக்காலில் இந்திய உணவுக் கழகம் மூலமாக நெல் கொள்முதல் மையங்கள் அமைக்க வேண்டும்' என, பார்லிமெண்டில், வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தினார்.

பார்லிமெண்டில் நேற்று முன்தினம் ஜீரோ நேரத்தில் அவர் பேசியதாவது:புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் நெற்களஞ்சியமாக விளங்குகிறது. ஆனால், புதுச்சேரி பிராந்தியத்திலும், காரைக்கால் பிராந்தியத்திலும் இந்திய உணவுக் கழகத்தின் கொள்முதல் மையம் தற்சமயம் இல்லை.

எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெற்பயிர்களை நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கொள்முதல்விலையைவிட குறைவான விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்குதள்ளப்பட்டுள்ளனர்.தற்போது நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச கொள்முதல் விலையானது குவிண்டாலுக்கு 1,850 ரூபாயாக உள்ளது. ஆனால், வியாபாரிகளோ குவிண்டாலுக்கு 1,500 ரூபாய் மட்டுமே தருகின்றனர். இதனால், மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

ஆகவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இந்திய உணவுக் கழகத்தின் மூலமாக கொள்முதல் மையம் அமைப்பதற்கு, மத்திய அமைச்சர் ஆவண செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X