இந்தியா

புதுச்சேரியில் இன்று (8ம் தேதி) வேலை வாய்ப்பு முகாம்

Added : பிப் 08, 2020
Share
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரியில் தொழிலாளர் துறை சார்பில், இன்று (8ம் தேதி) வேலை வாய்ப்பு முகாம்நடக்கிறது.

புதுச்சேரி அரசு தொழிலாளர் துறையின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (8ம் தேதி) காலை 9:00 மணி முதல் பகல் 1:00 வரையில், வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் வேர்ல்பூல், சுப்ரீம் இன்டஸ்ட்ரீஸ், நர்சிங் ஸ்டேஷன், கலவின்கா டிரைனிங் அகாடமி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் சுமார் 323 காலியிடங்களை நிரப்புவதற்கு நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது.

20 வயது நிரம்பிய, பி.இ., ; பி.டெக்.,; டிப்ளமோ.; பி.பார்ம்.,; ஜி.என்.எம்.,- பி.எஸ்சி., (ஆப்ரேஷன் தியேட்டர்), பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, - ஐ.டி.ஐ., மற்றும் பி.எஸ்சி., (நர்சிங்) கல்வி தகுதியினை கொண்டவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். பணியில் சேர்பவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.7,800 முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும்.முகாமிற்கு வருபவர்கள் தங்களது பயோ-டேட்டா மற்றும் கல்வி தகுதிக்கான உண்மை, நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X