இந்தியா

வாலிபர் தற்கொலை 

Added : பிப் 08, 2020
Advertisement

புதுச்சேரி:தாய் தந்தை இறந்த சோகத்தில் எலிபேஸ்ட் சாப்பிட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுச்சேரி, கென்னடி நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன், 28. இவரது பெற்றோர் மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்தார். தாய் தந்தை இறந்தது குறித்து அரவிந்தன், தினமும் புலம்பி வந்தவர் கடந்த 2ம் தேதி எலிபேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன், அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 5ம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X