பரமக்குடியில் வைக்கோல் லாரிகளால் விபத்து அபாயம் கலக்கத்தில் வாகன ஓட்டிகள்

Added : பிப் 08, 2020
Advertisement
 பரமக்குடியில் வைக்கோல்  லாரிகளால் விபத்து அபாயம் கலக்கத்தில் வாகன ஓட்டிகள்

பரமக்குடி:பரமக்குடியில் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கோல் லாரிகளால் விபத்து அபாயம் உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழை பொய்த்ததால் இந்த ஆண்டு நெல் விளைச்சல் அமோகமாக உள்ளது.

தற்போது அனைத்துப் பகுதிகளிலும் அறுவடை பணிகள் நடக்கிறது. அறுவடைக்கு பின் வைக்கோல் அபரிமிதமாக இருப்பதால் வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் ஏற்றி அனுப்பப்படுகிறது.இவ்வாறு வைக்கோல் கொண்டு செல்லும் போது அவற்றை முறையாக கட்டி செல்வது இல்லை. மேலும் டிராக்டர், லாரிகளில் அதன் அளவை விட அதிகமாக பக்கவாட்டுகளில் மற்றும் மேல் பகுதியிலும் ஏற்றிச் செல்கின்றனர்.

இதனால் வாகனங்களில் இருந்து காற்றின் வேகத்தில் வைக்கோல் பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு விபத்து ஏற்படுகிறது. இதேபோல் பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி விட்டு செல்ல முடியாத நிலையால் எதிரில் வரும் வாகனங்கள் விபத்து அபாயத்தில் செல்கின்றன.இதுபோல் அளவுக்கு அதிகமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X