பொது செய்தி

தமிழ்நாடு

மார்ச் 31 வரை அஞ்சலகத்தில் ஆதார் சிறப்பு முகாம்

Added : பிப் 08, 2020
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அஞ்சல் கோட்டத்தில் உள்ள 31 அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சிறப்பு முகாம் பிப். முதல் மார்ச்.31 வரை நடக்கிறது.இந்த 31 அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்படுகிறது.

அதன்படி ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை, முதுகுளத்துார், கமுதி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், வெளிப்பட்டினம், மண்டபம், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம், சத்திரக்குடி, எமனேஸ்வரம், நயினார்கோவில், பார்த்திபனுார், தேவிப்பட்டினம், மங்களக்குடி, பாம்பன், பனைக்குளம், பெரியபட்டினம், பெருங்குளம், சிக்கல், தங்கச்சிமடம், திருப்புல்லாணி, தொண்டி, உச்சிப்புளி, கடலாடி, பெருநாழி, சாயல்குடி, தேரிருவேலி, அபிராமம் ஆகிய இடங்களில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆதார் சிறப்பு முகாம்கள் பரமக்குடி, ராமநாதபுரம் தலைமை அஞ்சலகங்களில் பிப்., முதல் மார்ச் 31 வரை நடக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதியதாக ஆதார் அட்டை எடுக்க விரும்புவோர் மற்றும் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் அவரவர் பகுதிக்கு உட்பட்ட அஞ்சலகங்களுக்கு சென்று பயனடையலாம், என கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X