வீட்டு வாடகை படியில் முரண்பாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் புகார்

Added : பிப் 08, 2020
Share
Advertisement
சிவகங்கை:தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகை படியில் முரண்பாடு இருப்பதாக, மாவட்ட கருவூல அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் சிங்கம்புணரி, திருப்புத்துார் தாலுகா தவிர்த்து மற்ற அனைத்து தாலுகாக்களிலும் பணிபுரியும் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு கிரேடு 3ன் கீழ் வகைப்படுத்திய வாடகை படி வழங்கி வருகின்றனர்.ஆனால், சிங்கம்புணரி,

சிவகங்கை:தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகை படியில் முரண்பாடு இருப்பதாக, மாவட்ட கருவூல அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் சிங்கம்புணரி, திருப்புத்துார் தாலுகா தவிர்த்து மற்ற அனைத்து தாலுகாக்களிலும் பணிபுரியும் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு கிரேடு 3ன் கீழ் வகைப்படுத்திய வாடகை படி வழங்கி வருகின்றனர்.ஆனால், சிங்கம்புணரி, திருப்புத்துார் தாலுகாவில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டுமே கிரேடு 4ன் கீழ் வாடகை படி வழங்குகின்றனர்.

அதிலும் அங்கு பணிபுரியும் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு மற்ற ஆசிரியர்களை விட குறைவான வீட்டு வாடகை படியே வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், பொருளாளர் குமரேசன் மாவட்ட கருவூல அலுவலர் முனியசாமியிடம் புகார் அளித்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக,மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X