தேர்ச்சி பெற்றும் கிடைக்காத உதவித்தொகை: மாணவர்களுக்கு தொடரும் அவலம்| Dinamalar

தேர்ச்சி பெற்றும் கிடைக்காத உதவித்தொகை: மாணவர்களுக்கு தொடரும் அவலம்

Added : பிப் 08, 2020
Share

திருப்புத்துார்:திறனாய்வுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிகள்அலட்சியத்தால் உதவித்தொகை கிடைக்காத அவலம் தொடர்வதாக பெற்றோர் தெரிவித்துஉள்ளனர்.

எட்டாம் வகுப்பு படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழித் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தேர்ச்சி பெறும் 100 மாணவர்களுக்கு 12ம் வகுப்பு வரை படிக்க மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.மத்திய அரசால் நடத்தப்படும் இத்தேர்வில் திருப்புத்துார் வட்டாரத்தில் ஆண்டுதோறும் 50 மாணவர்களுக்கு மேல் தேர்ச்சி பெறுகின்றனர்.

ஆனால் இவர்கள் தங்கள் பள்ளியைவிட்டு அடுத்த பள்ளியில் 9ம் வகுப்பில் சேரும் போது பல பள்ளிகளில் இந்த மாணவர்களின் திறனாய்வுத் தேர்வுக்கான தேர்ச்சி குறித்து பதிவதோ, புதுப்பிப்பதோ இல்லை. அது தங்களது பணி அல்ல என்று ஒதுங்கிக் கொள்கின்றனர்.இதனால் மாணவர்களுக்கு அரசின் உதவித்தொகை கிடைப்பதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த அவலம் தொடர்கிறது. பல மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காமலேயே போய் விட்டது.

பல முறை கல்வித்துறையின் உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் புலம்புகின்றனர். கல்வித்துறையினர் மாவட்ட அளவில் ஆய்வு நடத்தி உதவித்தொகையை பெறாத மாணவர்கள் குறித்து கண்டறிவதுடன் அவர்களுக்கு முழுமையான உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X