நெல் கொள்முதல் நிலையங்களில் சோதனை கலெக்டர் ஆய்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையங்களில் சோதனை கலெக்டர் ஆய்வு

Added : பிப் 08, 2020
Share

சிவகங்கை:சிவகங்கை அருகே வாணியங்குடியில் நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் நடக்கும் நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் ஜெயகாந்தன் ஆய்வு செய்தார்.

மாவட்டத்தில் 65 ஆயிரம் எக்டேரில் நெல் நடவு செய்திருந்த விவசாயிகள் நெல் அறுவடை செய்து வருகின்றனர். விவசாயிகளிடம் ஒரு மூடை நெல்லை நுகர்பொருள் வாணிப கழகம் மூடை ஒன்றுக்கு (66 கிலோ) ஆயிரத்து 287 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. அதே நேரம் தனியார் ரூ.920க்கு கொள்முதல் செய்கின்றனர்.

இதனால், நுகர்பொருள் வாணிப கழகத்தில் நெல் மூடைகளை வழங்க விவசாயிகள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.மாவட்ட அளவில் பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்து வருகின்றனர்.

இம்மையங்களில் விவசாயிகளிடம் வாங்கும் நெல்லை முறையாக எடை போடுகின்றரா, கொள்முதல் விலை வழங்குவதில் புரோக்கர் நடமாட்டம் உள்ளதா என கலெக்டர் ஜெயகாந்தன் ஆய்வு செய்தார். சிவகங்கை அருகே வாணியங்குடி கொள்முதல் நிலையத்தில் சரியான எடையில் நெல்லை வாங்குகின்றனரா என பார்வையிட்டார். தாசில்தார் மைலாவதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X