டில்லியில் 67 % ஓட்டுப்பதிவு

Updated : பிப் 08, 2020 | Added : பிப் 08, 2020 | கருத்துகள் (10)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த நேரம் வரை 67 சதவீதம் ஓட்டுக்கள் பதிவானதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ ஓட்டுப்பதிவு இன்னும் வெளியாகவில்லை.






70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று தேர்தல் நடப்பதை முன்னிட்டு 70 தொகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வரும் ஷாஹீன்பாக் பகுதியில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஓட்டு எண்ணிக்கை, 11ம் தேதி நடக்கிறது. டில்லியில் ஆட்சியை பிடிப்பது யார் என, தெரிந்துவிடும்.





'ஆட்சியை தக்க வைப்போம்' என, ஆம் ஆத்மி கட்சியும், 'இம்முறை ஆட்சியை கைப்பற்றுவோம்' என, பா.ஜ.,வும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. ஆம்ஆத்மி, பா.ஜ., காங்., இடையே கடும் போட்டி நிலவுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பா.ஜ., தலைவர் ராம் மாதவ் உள்ளிட்டோர் ஓட்டுப்பதிவு துவங்கியதும் முதல் ஆளாக வந்து ஓட்டளித்தனர். 13,750 ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் ஓட்டுப்பதிவிற்காக டில்லி போலீசார், துணை ராணுவம் என மொத்தம் 2,50,000 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
King of kindness - muscat,ஓமன்
08-பிப்-202019:10:57 IST Report Abuse
King of kindness ஒன்றே ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.காங்கிரஸ் கண்டெஸ்ட் லேயே இல்லை என்பது. இது ஒரு தேசிய கட்சிக்கு வெட்கக்கேடு.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-பிப்-202018:23:55 IST Report Abuse
Endrum Indian கொஞ்சம் குளிர் அதிகம் தான் அதுக்காக வோட்டு போட போகவில்லையா???
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
08-பிப்-202018:05:28 IST Report Abuse
blocked user சென்ற முறை போல அல்லாமல் காங்கிரஸ் ஓட்டைப்பிரித்து விடும். ஆகவே அவ்வளவு எளிதில் ஆம் ஆத்மி ஜெயித்து விட முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X