பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளச்சாராய தீமை: விழிப்புணர்வு பேரணி

Added : பிப் 08, 2020
Advertisement

சங்ககிரி: கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமை குறித்து, விழிப்புணர்வு பேரணி நடந்தது. சேலம் மாவட்டம், கலால் துறை சார்பில், கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமை குறித்து, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. சேலம், உதவி கலால் ஆணையர் அம்பாயிரம் தலைமை வகித்தார். சங்ககிரி ஆர்.டி.ஓ., வளாகத்தில் தொடங்கிய பேரணியில், வீராட்சி பாளையம், புள்ளிபாளையத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவ, மாணவியர், 'கள்ளச்சாராயம் மனித உயிரை பாதிக்கும்; மதுவை ஒழிப்போம், மகிழ்ச்சியாய் இருப்போம்' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தபடி, பழைய இடைப்பாடி சாலை, சந்தைப்பேட்டை, புதிய இடைப்பாடி சாலை வழியாக சென்று, ஆர்.டி.ஓ., அலுவலகத்திலேயே நிறைவு செய்தனர். இதையடுத்து, கலைக்குழுவினர், எமன் வேடமணிந்து, சாராயத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சங்ககிரி கோட்ட கலால் அலுவலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X