அ.தி.மு.க., ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அ.தி.மு.க., ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும்'

Added : பிப் 08, 2020
Share

சங்ககிரி: ''அ.தி.மு.க., ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும்,'' என, சேலம் மேற்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் செல்வகணபதி பேசினார்.
சங்ககிரி ஒன்றிய, நகர, தி.மு.க., சார்பில், சங்ககிரியில், குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து, கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் ராஜேஷ் தலைமை வகித்தார். அதில், சேலம் மேற்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் செல்வகணபதி பேசியதாவது: கடந்த, 2 முதல், 8(இன்று) வரை, நடக்கும் கையெழுத்து இயக்கத்தில், தமிழகம் முழுவதும், ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம். குடியுரிமை திருத்த சட்டத்தில், அனைவருக்கும் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் எனக்கூறுகின்றனர். அது அனைவரிடமும் இருக்க வாய்ப்பு குறைவு. அதனால், மக்களிடமும் எதிர்ப்பு வலுவாக உள்ளது. இது, தமிழக அரசுக்கு தெரிந்தும், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாமல், பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால், தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, சங்ககிரி ஒன்றியம், மொத்தையனூர் ஊராட்சி பகுதிகளில், அ.தி.மு.க.,விலிருந்து விலகிய, 25 பேர், தி.மு.க.,வில் இணைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X