பொது செய்தி

தமிழ்நாடு

தை 4வது வெள்ளி: பால் அபிஷேகம்

Added : பிப் 08, 2020
Share
Advertisement

ஆத்தூர்: தை வெள்ளியொட்டி, பாலசுப்ரமணியர் கோவிலில், பால் அபி ?ஷகம், திருக்கல்யாணம் நடந்தது. தை நான்காவது வெள்ளியையொட்டி, தை வெள்ளி விழா குழு சார்பில், ஆத்தூர் அருகே, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், நேற்று, பால் அபி ?ஷகம் நடந்தது. இதற்காக, மதியம், ஏராளமான பெண்கள், ஆத்தூரிலிருந்து பால்குடங்களை எடுத்து, ஊர்வலமாக, கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, மூலவர் பாலசுப்ரமணியருக்கு அபி?ஷகம் செய்யப்பட்டது. பின், பாலசுப்ரமணியருக்கு, வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது, சுமங்கலி பெண்கள், சீர்வரிசை பொருட்களை எடுத்துச்சென்று, சுவாமியை வழிபட்டனர். மேலும், திருவிளக்கு பூஜை, 1,080 நெய் தீப வழிபாடு நடந்தது. மூலவர் பாலசுப்ரமணியர், புஷ்பம், வெள்ளி கவசம் என, ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல், சேலம், அணைமேடு, நந்தவனம், ரேணுகா அம்மன் கோவிலில், மூலவர் அம்மன், வளையல் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X