பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்

Added : பிப் 08, 2020
Advertisement

சாலையில் பரவிய மண்ணால் விபத்து: தலைவாசல், மும்முடி - கோவிந்தம் பாளையம் நெடுஞ்சாலையை, தினமும் பலர் பயன்படுத்துகின்றனர். சாலை பக்கவாட்டில் உள்ள பள்ளங்கள், மண் மூலம் சீரமைக்கப்பட்டன. ஆனால், அப்பணியின்போது விழுந்த மண், பெரும்பாலான இடங்களில் பரவியுள்ளன. இதனால், மண் சாலை போன்று மாறி, இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். மண்ணை அகற்றக்கோரி, அதிகாரிகளிடம் தெரிவித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
தடைக்கு தேவை எச்சரிக்கை பலகை: ஏகாபுரம் ஊராட்சி அலுவலகம் முன், எட்டிக்குட்டைமேடு செல்லும் சாலையில், தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் செல்கின்றனர். அங்கு, விபத்தை தடுக்க, கடந்த மாதம் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால், எச்சரிக்கை பலகை வைக்கவில்லை. இதனால், இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பது தெரியாமல், தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். அதனால், வெள்ளை நிற வண்ணமடித்து, எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்.

தொட்டி அடித்தளம் சீரமைக்க வேண்டும்: சங்ககிரி, அரசு மருத்துவமனை சாலை, சமுதாயக்கூட வளாகத்தில், ஆழ்துளை குழாய் அமைத்து, சிறுமின் விசை பம்புடன் கூடிய தொட்டி வைத்து, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால், தொட்டி வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தை சுற்றி விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், தொட்டி சாய்ந்து விழும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து, பேரூராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும், அவர்கள், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடுநிலை பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவை: இடங்கணசாலை பேரூராட்சி, வளையசெட்டிப்பட்டி நடுநிலைப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், கால்நடைகள் நுழைந்துவிடுகின்றன. குறிப்பாக, நாய்கள் சண்டையிட்டுக்கொள்வதால், மாணவியர் அச்சப்படுகின்றனர். மேலும், அங்குள்ள ஊஞ்சல், சீசா, சறுக்கல் உள்ளிட்ட உபகரணங்கள் சேதமடைந்து, சரியாக பராமரிக்காமல் விட்டதால், மாணவர்கள் விளையாட முடியாமல் தவிக்கின்றனர்.

சாலை மோசம்; மக்கள் சிரமம்: சங்ககிரி, ஒன்பதாவது வார்டு, வி.என்.பாளையத்தில் இருந்து, மாரியம்மன் கோவில் வரை செல்லும் சாலை, படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால், அச்சாலையில் செல்லும் வாகனங்கள் சேதமடைவதோடு, அடிக்கடி பஞ்சராகி நிற்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும், பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள், பாதசாரிகளின் பாதங்களை பதம்பார்க்கின்றன. சாலையை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X