பொது செய்தி

தமிழ்நாடு

வினாத்தாள் வடிவமைப்பில் குழப்பம்: தேர்வுக்கு தேர்வு மாறுவதால் அதிர்ச்சி

Added : பிப் 08, 2020
Advertisement

சேலம்: பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாள் வடிவமைப்பு, அரையாண்டு தேர்வு, திருப்பத்தேர்வுகளுக்கு மாறியிருப்பதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 10ம் வகுப்புக்கு நடப்பு கல்வியாண்டில், புது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், பாடப்பகுதியிலிருந்து மட்டுமின்றி, சிந்திக்கும் வகையில் வினாக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப, காலாண்டு, இடைத்தேர்வுகள் நடத்தப்பட்டன. அரையாண்டு தேர்வின்போது, சமூக அறிவியல் பாடத்தில், ஒரு மதிப்பெண் வினாக்களாக கொடுக்கப்பட்டு வந்த பொருத்துக, தலைப்பின் கீழ் வினா பகுதிகள் இடம்பெறவில்லை. அந்த மதிப்பெண்களுக்கு, விரிவான விடையளிக்கும் வினாக்கள் அதிகரிக்கப்பட்டிருந்தன. அந்த வடிவமைப்பிலேயே பொதுத்தேர்வு நடத்தப்படும் என, தேர்வுத்துறை அறிவித்திருந்தது. ஆனால், தற்போது நடத்தப்பட்டு வரும் திருப்பத்தேர்வுகளில், மீண்டும் பொருத்துக பகுதி இடம்பெற்றுள்ளது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்களிடையே குழப்பம் நிலவுகிறது. இதனால், பொதுத்தேர்வில், சமூக அறிவியல் வினாத்தாள் இடம்பெறும் வடிவமைப்பு குறித்து, தெளிவான வழிகாட்டல் இல்லாவிட்டால், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் சரியும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X