வேர்கள் அரிக்கப்பட்ட இலவ மரம்; சாலையில் முறிந்து விழும் அபாயம்

Added : பிப் 08, 2020
Share
Advertisement

மேட்டூர்: தோட்டத்தில், வேர்கள் அரிக்கப்பட்ட இலவமரம், சாலையில் முறிந்து விழும் நிலையில் உள்ளதால், மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மேட்டூர் நகராட்சிக்கு சொந்தமான, அரசு தோட்டத்தில், ஒப்பந்ததாரர்கள் கால்நடை தீவனம் வளர்த்து விற்பனை செய்கின்றனர். அத்தோட்டத்தின் நடுவே, 12, 13வது வார்டு கோம்புரான்காடு, குப்பை கிடங்குக்கு செல்லும் மண்சாலை அமைந்துள்ளது. தினமும், அச்சாலையை கடந்து, ஏராளமான மாணவர்கள் பள்ளிக்கும், மக்கள் வேலைக்கும் செல்கின்றனர். ஆனால், தோட்டத்தில் சாலையோரமுள்ள பழமையான இலவமரத்தின் வேர்கள் அரிக்கப்பட்டு விட்டன. கடந்த வாரம், அந்த மரத்தின் மூன்று கிளைகளில் ஒன்று முறிந்து, தீவனப்புல் வளர்ந்து வந்த நிலத்தில் விழுந்தது. சாலை பக்கமாக சாய்ந்து நிற்கும் மற்ற இரு கிளைகளும், எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. அவ்வாறு கிளை முறியும் பட்சத்தில், சாலையில்தான் விழும் என்பதால், அப்பகுதியை கடந்து செல்லும் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அசம்பாவிதத்தை தடுக்க, நகராட்சி நிர்வாகம், விழும் நிலையில் உள்ள இலவ மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X