இடிந்து விழும் நிலையில் பழைய வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்

Added : பிப் 08, 2020
Advertisement

வீரபாண்டி: இரு ஆண்டுக்கு மேலாக, பயன்பாடின்றி பூட்டப்பட்டுள்ள, பழைய வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம், இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
சேலம் மாவட்டம், கல்பாரப்பட்டி மாரியம்மன் கோவில், ஊராட்சி அலுவலகம், தபால் அலுவலகம் ஆகியவற்றின் அருகே, 30 ஆண்டுக்கு மேலாக வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்பட்டு வந்தது. நான்காண்டுக்கு முன், கல்பாரப்பட்டி ஏரி அருகே, வி.ஏ.ஓ., குடியிருப்புடன் கூடிய புது அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு, இரு ஆண்டாக, புது கட்டடத்தில் செயல்படுகிறது. இந்நிலையில், பழைய வி.ஏ.ஓ., அலுவலகம் பாரமரிப்பின்றி, மேற்கூரை, சுவர்களில் விரிசல் விழுந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அருகில், ஊராட்சி அலுவலகம், தபால் அலுவலகம் செயல்படுவதால், மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். அதனால், பயன்படாத பழைய கட்டடத்தை, பாதுகாப்பாக இடித்து அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X