பள்ளி எதிரில் பயன்படுத்த முடியாத விளையாட்டு உடற்பயிற்சி மையம்

Added : பிப் 08, 2020
Share
Advertisement

வீரபாண்டி: அரசுப்பள்ளிக்கு எதிரில், அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் இளைஞர் உடற்பயிற்சி மைய உபகரணங்கள் அனைத்தும், பராமரிப்பின்றி உடைந்து வீணாகி வருகின்றன.
வீரபாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட, சின்ன சீரகாபாடி சமத்துவபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில், 2009ல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கைப்பந்து, பூப்பந்து, சதுரங்கம், கேரம், கிரிக்கெட், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், பளு தூக்கும் சாதனங்கள், ஊஞ்சல், சறுக்கு விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிக்கு தேவையான உபகரணங்களுடன் சமுதாய விளையாட்டு மையம் அமைக்கப்பட்டது. இது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி, உபகரணங்கள் அனைத்தும் உடைந்து பயன் படுத்த முடியாத நிலையில் துருப்பிடித்து கிடக்கிறது. பள்ளி மாணவர்கள், கிராமப்புற இளைஞர்கள் ஆகியோருக்கு, விளையாட்டு பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய இடமின்றி தவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சமுதாய விளையாட்டு மையத்தை சீர் செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X