சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவேறு விபத்தில் இரண்டு பேர் பலி

Added : பிப் 08, 2020
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, இரு வேறு விபத்தில் இரண்டு பேர் பலியாயினர்.
* திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடியை சேர்ந்தவர் பாஸ்கரன், 40, அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 45. இருவரும், நேற்று ஹோண்டா பைக்கில், கருத்துவாம்பாடிக்கு சென்றனர். அப்போது, பின்னால் வந்த லாரி, இவர்கள் மீது மோதியதில், கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பலியானார். பாஸ்கரன், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


* கண்ணமங்கலம் அடுத்த வெள்ளூர் சாலக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம், 70, இவர், நேற்று முன்தினன் இரவு, திருவண்ணாமலை சாலையில், சந்தவாசல் நோக்கி நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத பைக், இவர் மீது மோதியதில் படுகாயமடைந்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X