டிராக்டர் வைக்கோலில் தீ| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டர் வைக்கோலில் தீ

Added : பிப் 08, 2020
Share

திருச்சி: டிராக்டரில் ஏற்றிச் சென்ற வைக்கோல் திடீரென தீப்பற்றி எரிந்ததை, தீயணைப்புத்துறையினர் ஒருமணி நேரம் போராடி அணைத்தனர். திருச்சி, மணப்பாறை அருகே உள்ள காட்டுப்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., சின்னான். இவர், மணிகண்டம் பகுதியில் இருந்து, நேற்று முன்தினம் மாலை, 2 டிராக்டர் டிப்பரில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு, திருச்சி- திண்டுக்கல் சாலையில், மணப்பாறை அடுத்த இடையபட்டியான்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென டிராக்டரில் இருந்த வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. தீ மேலும் பரவாமல் இருக்க, சின்னான் டிராக்டரை நடுரோட்டில் நிறுத்தி விட்டார். தீவிபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த மணப்பாறை தீயணைப்பு துறையினர், ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X