இன்று பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம்

Added : பிப் 08, 2020
Share

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தில், உணவு பொருள் வழங்குதல் தொடர்பாக, 10 இடங்களில் இன்று காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதன்படி, ஈரோடு தாலுகாவுக்கு, மேட்டுவாசுவம்பாளையம் ரேஷன் கடையில் நடக்கிறது. பெருந்துறை - கொடுமணல் ரேஷன் கடை, பவானி - திப்பிசெட்டிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகம், கோபி - கூகலூர் அடுத்த பொம்மநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், சத்தியமங்கலம் - கெம்பநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வளாகம், அந்தியூர் - பர்கூர் அருகே ஊசிமலை ரேஷன் கடையில் கூட்டம் நடக்கிறது. மொடக்குறிச்சி - புஞ்சை காளமஞ்சலம் ரேஷன் கடை, கொடுமுடி - ஆவுடையார்பாறை ரேஷன் கடை, தாளவாடி - முதியனூர் ரேஷன் கடை, நம்பியூர் - ஈ.வரப்பாளையம் அருகே ஒழலக்கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டம் நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X