பொது செய்தி

தமிழ்நாடு

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனங்களில் நீர் திறப்பு அதிகரிப்பு

Added : பிப் 08, 2020
Advertisement

கோபி: நாற்றாங்கல் சார்ந்த பணிக்காக, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனங்களில், தண்ணீர் திறப்பு நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொடிவேரி தடுப்பணையிலிருந்து, தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனங்களில், இரண்டாம் போகத்துக்கு, கடந்த, 1ல் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது தடப்பள்ளி வாய்க்காலில், 140 கன அடி, அரக்கன்கோட்டை வாய்க்காலில், 40 கன அடி வெளியேற்றப்பட்டது. இரு பாசனங்களிலும், நாற்றாங்கால் சார்ந்த பணி தற்போது நடக்கிறது. இதனால் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல், தடப்பள்ளி வாய்க்காலில், 508 கன அடி, அரக்கன்கோட்டை வாய்க்காலில், 268 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த அளவே, வரும் நாட்களில் தொடரும் என, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X