பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : பிப் 08, 2020
Advertisement

சேதமான சாலை; மக்கள் அவதி: ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்., எர்ரப்பட்டியில் இருந்து, ராஜவீதி வரை, 2 கி.மீ., தூரத்துக்கு தார்ச்சாலை உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சாலையில், தற்போது பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதை சீரமைக்கக்கோரி, பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், நடவடிக்கை இல்லை. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
நூலக பூட்டை திறக்கணும்: மொரப்பூர் அடுத்த குருபரஹள்ளி பஞ்.,ல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், கடந்த, 2008 - 09ல், புதிய நூலக கட்டடம் கட்டப்பட்டது. சில ஆண்டுகள் மட்டுமே, செயல்பட்டு வந்த இந்த நூலகம் தற்போது, முறையாக திறக்கப்படாமல் பூட்டியுள்ளது. எனவே, வாசகர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயனடையும் வகையில், பூட்டியுள்ள நூலகத்தை உடனடியாக திறக்க வேண்டும்.

அடுக்கு சாலையால் விபத்து அபாயம்: நல்லம்பள்ளி தாலுகா சேஷம்பட்டியில், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை உள்ளது. ஓராண்டுக்கு முன் புதுப்பிக்கப்பட்ட இது, அதிக உயரமாக அமைக்கப்பட்டதால், பழைய சாலை தாழ்வாக உள்ளது. இவ்வாறு பலமுறை அமைக்கப்பட்ட பழைய தார்ச்சாலைகள் அடுக்கடுக்காக தாழ்வாக உள்ளதால், சாலையோரம் செல்லும் வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி கிழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X