பொது செய்தி

தமிழ்நாடு

'தகுதியான பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை'

Added : பிப் 08, 2020
Advertisement

அரூர்: ''முதல்வர் அறிவிப்பின்படி, தகுதியான பயனாளிகளுக்கு, முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது,'' என, அமைச்சர் அன்பழகன் பேசினார்.
தர்மபுரி மாவட்டம் அரூரில், முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கலெக்டர் மலர்விழி தலைமையில், நேற்று நடந்தது. இதில், 1,173 பயனாளி களுக்கு, 13 கோடியே, 80 லட்சத்து, 44 ஆயிரத்து, 950 ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை வழங்கி, அமைச்சர் அன்பழகன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் கூடுதலாக, ஐந்து லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி, அரூரில், 350 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், முதியோர் உதவித்தொகையாக, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில், 400 ரூபாய்க்கு மேல் வழங்குவதில்லை. இவ்வாறு பேசினார். விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், சப் - கலெக்டர் பிரதாப் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X