பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : பிப் 08, 2020
Advertisement

தடுப்பு சுவரின்றி வாய்க்கால் பாலம்: கிருஷ்ணகிரி ஒன்றியம், மோரமடுகிலிருந்து சோக்காடி கிராமம் செல்லும் சாலையில், சோக்காடி அருகே, தண்ணீர் செல்லும் வாய்க்கால் உள்ளது. இதன் மீது, 20 மீட்டர் தூரத்துக்கு பாலம் உள்ளது. இதன் இரண்டு பக்கத்திலும் இருந்த தடுப்புகள் உடைந்து, தற்போது பாதுகாப்பின்றி ஆபத்தான நிலையில் உள்ளது. பாலத்தின் அருகில் சாலை வளைவு உள்ளதால், இரவில் வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
தொட்டி இருக்கு; தண்ணீர் இல்லை: கிருஷ்ணகிரி, பெத்ததாளாப்பள்ளி பஞ்., ஆனந்த நகரில் கடந்த, 2015ல், புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பிளாஸ்டிக் தொட்டி வைத்தனர். ஆறு மாதங்கள் மட்டுமே தண்ணீர் வந்த நிலையில், மோட்டார் பழுதால் நீர் ஏற்ற முடியாமல் போனது. இதனால் தொட்டியைச் சுற்றியும் புதர் மண்டி உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் இங்குள்ளோர் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, புதிய மோட்டார் பொருத்தி, சீராக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X