சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள்களுக்கு பாலியல் தொல்லை: காமகொடூர தந்தைக்கு 40 ஆண்டு சிறை

Added : பிப் 08, 2020
Advertisement

ஈரோடு: இரண்டு மகள்களுக்கு, பாலியல் தொல்லை தந்த, காமகொடூர தந்தைக்கு, 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன், 48; கட்டட தொழிலாளி. முதல் மனைவி இறந்த தால், தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை, இரண்டாம் திருமணம் செய்தார். தம்பதியருக்கு ஏழு, எட்டு வயதில், இரு பெண் குழந்தைகள் உள்ளன. குழந்தைகளுக்கு, கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஈரோடு மகளிர் போலீசில், கடந்த, 2016ல் மனைவி புகாரளித்தார். இது தொடர்பான வழக்கு, ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கில், நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு வழங்கினார். மகள்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றத்துக்காக, தலா, 20 ஆண்டுகள் என, 40 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளுக்கும் தலா, இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, அரசுக்கு பரிந்துரைத்தார். தீர்ப்பை தொடர்ந்து, கோவை மத்திய சிறையில், குருநாதன் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X