பொது செய்தி

தமிழ்நாடு

'ஓம் நமச்சிவாய' கோஷம் முழங்க 58 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம்

Added : பிப் 08, 2020
Advertisement

தலைவாசல்: காமநாதீஸ்வரர் கோவிலில், 58 ஆண்டுக்கு பின், திரளான பக்தர்களின், 'ஓம் நமச்சிவாய' கோஷம் முழங்க, தமிழ், சமஸ்கிருத முறைப்படி, கும்பாபி?ஷகம் நடந்தது.
சேலம் மாவட்டம், தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலில், வேறெங்கும் இல்லாத வகையில், எட்டு பைரவர் சிலைகள் உள்ளன. 850 ஆண்டுக்கு முன், மன்னர் வாணகோவரையனால் கட்டப்பட்ட இக்கோவிலில், 1962, செப்., 6ல், கும்பாபி ?ஷகம் நடந்தது. இந்நிலையில், கடந்த மூன்றாண்டாக, இரண்டு கோடி ரூபாய் செலவில், கோவில் புனரமைக்கப்பட்டு, நேற்று காலை, 9:30 மணிக்கு, கும்பாபி?ஷகம் நடந்தது. மூலவர் காமநாதீஸ்வரர், பெரியநாயகி அம்மன், ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம், கால பைரவர் உள்பட, 31 கோபுர கலசங்களுக்கு, தமிழ், சமஸ்கிருதத்தில், மந்திரங்களை உச்சரித்த சிவாச்சாரியார்கள், கலசங்கள் மீது புனித நீரூற்றினர். சிவவாத்திய இசை, பக்தர்களின், 'ஓம் நமச்சிவாய' கோஷம் முழங்க, கும்பாபி?ஷகம்கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின், மூலவர் காமநாதீஸ்வரர், பெரியநாயகி அம்மன், வெள்ளி கவசம், காலபைரவர், ஆறுமுகம் கொண்ட முருகன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X