பொது செய்தி

தமிழ்நாடு

முருங்கைக்காய் அறுவடை தொடக்கம்: 2 மாதமாக உச்சத்திலிருந்த விலை சரிவு

Added : பிப் 08, 2020
Advertisement

சேலம்: முருங்கைக்காய் அறுவடை தொடங்கியதால், இரு மாதமாக உச்சத்திலிருந்த விலை சரிந்துள்ளது.
முருங்கைக்காய் அதிகளவில் விளையும், ஈரோடு மாவட்டம், வெள்ளகோவில், முத்தூர்; திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி; சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி உள்ளிட்ட இடங்களில், கடந்த அக்டோபர் முதல், ஜனவரி வரை, முருங்கைக்காய் விளைச்சல் முற்றிலும் இல்லை. இதனால், சென்னை - கோயம்பேடு, திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், சேலம் - தலைவாசல், மதுரை - மாட்டுத்தாவணி, நாகர்கோவில் - வடசேரி ஆகிய மார்க்கெட்டுக்களுக்கு, முருங்கைக்காய் வரத்து முற்றிலும் நின்று, அதிகபட்சமாக கிலோ, 500 ரூபாய், தனி காய், 40 ரூபாய் வரை விற்றது. தற்போது, முருங்கை அறுவடை தொடங்கி, மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. நேற்று, உழவர்சந்தைகளில் முருங்கைக்காய் கிலோ, 120 ரூபாய், தனி காய் அளவுக்கேற்ப, ஐந்து முதல், ஏழு ரூபாய் வரை விற்பனையானது. வெளி மார்க்கெட்டில், சிறு முருங்கை, ஏழு ரூபாய், பெரிய முருங்கை, 10 ரூபாய், கிலோ, 140 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X