சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாப்பாடு வழங்க தாமதம்: ஓட்டல் ஊழியர் கொலை

Added : பிப் 08, 2020
Advertisement

ஆத்தூர்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, பேளூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், 'பாரதி' என்ற பெயரில் ஓட்டல் நடத்துகிறார். அதில், அதே ஊரைச் சேர்ந்த, குமரவேல், 35, சப்ளையராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, 11:00 மணிக்கு, வாழப்பாடி, ரங்கனூரைச் சேர்ந்த, கூலித்தொழிலாளி தங்கபாலு, 28, சாப்பிட வந்தார். அப்போது, குமரவேல் சற்று நேரத்துக்கு பின் உணவு வழங்கியுள்ளார். அதனால், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், சாப்பாட்டுடன் இலையை, தங்கபாலு தூக்கி வீசினார். தொடர்ந்து, குமரவேலை தாக்கியுள்ளார். அதில் படுகாயமடைந்த அவரை, வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார், கொலை வழக்குப்பதிந்து, தங்கபாலுவை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X