பொது செய்தி

இந்தியா

மணமகள் புடவை சரியில்லையாம்: திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை

Updated : பிப் 08, 2020 | Added : பிப் 08, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு: மணப்பெண் அணிந்திருந்த புடவையின் தரம் சரியில்லை என்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.



latest tamil news


கர்நாடகாவின் ஹசன் நகருக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரகுகுமார். இவர் சங்கீதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த இருவரும், தங்கள் வீட்டில் பேசி, அவர்களின் சம்மதத்துடன் திருமணத்திற்கு ஏற்பாடு நடந்துள்ளது. திருமணத்தன்று சடங்குகளின் போது சங்கீதா அணிந்திருந்த புடவையின் தரம் சரியில்லை எனவும், அந்த புடவை தங்களுக்கு பிடிக்கவில்லை எனக்கூறிய ரகுகுமாரின் பெற்றோர், அதை மாற்றும்படி சங்கீதாவிடம் கூறி உள்ளனர்.


latest tamil news



ஆனால் அதற்கு மணமகள் சங்கீதா மறுப்பு தெரிவித்ததை அடுத்து, ரகுகுமாரன் பெற்றோர் திருமணத்தை நிறுத்தி உள்ளனர். ரகுகுமாரும் ஏதும் பேசாமல் தனது பெற்றோர் கூறுவதை கேட்டு, அவர்களுடன் அமைதியாக சென்று விட்டார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சங்கீதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரின் தலைமறைவான ரகுகுமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivan - seyyur,இந்தியா
12-பிப்-202016:00:44 IST Report Abuse
sivan பொதுவாக மணப்பெண் புடவை மாப்பிள்ளை வீட்டாரால் வாங்கப் படும். எனவே அந்த பெண் வீட்டார்தான் வேண்டும் என்றே மணமகன் வீட்டாரை சீண்டி புடவை சரியில்லை என்று புகார் கூறி திருமணத்தை நிறுத்தி இருக்க வேண்டும் என நினைக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
K K KANNAN - KANYAKUMARI ,இந்தியா
11-பிப்-202009:58:21 IST Report Abuse
K K KANNAN நல்ல வேளை திருமணத்திற்கு முன்பே அறிந்துவிட்டாள் அவன் எப்படி என்று வாழ்த்துக்கள் சகோதரி அவனை தூக்கி எரிந்து விட்டு தாய் தகப்பன் வீட்டார் சொல்லும் மணமகனை மணந்து சிறப்பாக வாழ வாழ்துகின்றேன்
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
10-பிப்-202020:14:33 IST Report Abuse
Krishnamurthy Venkatesan திருமணத்திற்காக காஸ்டலியாக வாங்கப்படும் புடவைகளை ஒருமுறைக்கு மேல் யாரும் பயன்படுத்தியதில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X