பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதிப்பு?: சென்னையில் 2 சீனர்கள் அனுமதி

Updated : பிப் 08, 2020 | Added : பிப் 08, 2020 | கருத்துகள் (15)
Advertisement
Chinese_national, admit, hospital, Chennai, doctor,hospital, Stanley_hospital,  சீனர்கள், கொரோனாவைரஸ், சென்னை, ஸ்டான்லிமருத்துவமனை, டாக்டர்கள்

இந்த செய்தியை கேட்க

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு சீனர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேருக்கும் கொரோனா தாக்கியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், இரண்டு இளைஞர்களுக்கும் சிகிச்சை அளிக்க சென்ற போது, மருத்துவமனை அதிகாரிகள் தங்களுக்கு, நோய் தாக்குதலில் இருந்து தடுக்கும் உபகரணங்களை வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக தங்களது துறைத்தலைவருக்கு அந்த டாக்டர்கள் எழுதிய கடிதம்: பிப்.,5 2020 முதல், கொரோனா வைரஸ் தாக்குதல் என்ற சந்தேகத்தில் 4 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்ப்பது தெரியும். அதில், இரண்டு பேர் முதல் தளத்திலும் மற்ற இரண்டு பேர் 6வது தளத்திலும் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு, நோயாளிகள் மற்றும் பொது மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பது தெரியும். 48 மணி நேரங்கள் தாண்டியும், உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் விதிகளின்படி, அவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. அந்த பகுதியில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவில்லை. இது, சுகாதார ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு அச்சுறுத்தல் ஆகும். உலக சுகாதார அமைப்பின் விதிகளை பின்பற்றுவதுடன், மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சீனா சென்று இந்தியா திரும்பிய 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-பிப்-202020:26:57 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்த சீனர்களை எவண்டா இங்கே விட்டது அடுத்துப்போராட்டம் சுடாலின் அறிவிப்பு தும்மல்போட்டாலே உடனே அனுமதிக்கவேண்டும் ஆசுபத்திரிக்குள்ளே
Rate this:
Share this comment
Cancel
Routhiram Palagu - Chennai,இந்தியா
09-பிப்-202001:27:14 IST Report Abuse
Routhiram Palagu Namma vurla paravana thadukka mudiyadha. Olunga nadavadikai edungada nagula paandigalah. Ella mla minister above 50 years dhaan. Corona vandha straightah paralogam dhaan.
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
08-பிப்-202023:44:48 IST Report Abuse
Vena Suna பொறுப்பற்ற கேவலம்..மக்கள் உயிர் மீது அக்கறை இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X