பொது செய்தி

தமிழ்நாடு

முதுகலை ஆசிரியர் பணி: நாளை கலந்தாய்வு துவக்கம்

Added : பிப் 08, 2020
Advertisement

நாமக்கல்: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வு செய்யப்பட்ட பணிநாடுனர்களில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பணி நாடுனர்களுக்கு, மாநில முன்னுரிமை, முதுநிலை தர எண் அடிப்படையில், பணி நியமன ஆணை வழங்குவதற்கு, கலந்தாய்வு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. அதன்படி, நாளை (பிப்., 9) காலை, 9:00 மணிக்கு, தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், மனையியல், உடற்கல்வி இயக்குனர் நிலை, ஒன்று. பிப்., 10 காலை, 9:00 மணிக்கு, கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து தகவல் பெற்ற பணி நாடுனர்கள், தங்களுடைய ஆசிரியர் தேர்வு வாரிய, தேர்வுக்கூட நுழைவு சீட்டு, அசல் கல்விச் சான்று, ஜாதிச் சான்று மற்றும் இதர சான்றிதழ்கள் மற்றும் அதன், இரு நகல்களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X