ஒரு தலைக்காதல்: பெண் எஸ்.ஐ.,யை சுட்டுக் கொன்று எஸ்.ஐ., தற்கொலை

Updated : பிப் 08, 2020 | Added : பிப் 08, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லியின் ரோஹினி கிரக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகே பெண் எஸ்.ஐ., ஒருவர், தனது ஆண் நண்பரான எஸ்ஐ.,யால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.latest tamil newsடில்லியில் இன்று சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் நேற்று (பிப்.,07) இரவு 26 வயதாகம் ப்ரீத்தி என்ற எஸ்.ஐ., மர்ம நபர் ஒருவரால் தலையில் சுடப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இரவு 9.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றதாக கூறிய போலீசார், கொலையாளியை கண்டுபிடித்து விட்டதாக தற்போது தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 3 காலி தோட்டாக்களை கைப்பற்றி உள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து, கொலையாளியை கண்டுபிடித்துள்ளனர்.


latest tamil newsடில்லி போலீசில் எஸ்.ஐ.,ஆக உள்ள தீபன்சு என்பவர் தான் ப்ரீத்தியை சுட்டதாகவும், ப்ரீத்தியை கொலை செய்த பிறகு தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அரியானா மாநிலம் கர்னல் மாவட்டம் அருகே கார் ஒன்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ப்ரீத்தியும் தீபன்சுவும் ஒன்றாக படித்து, 2018 ல் டில்லி போலீசில் பணியில் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ப்ரீத்தி மீது தீபன்சு ஒரு தலை காதல் கொண்டிருந்ததாகவும், இது தான் கொலைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
08-பிப்-202015:01:35 IST Report Abuse
S.Baliah Seer அந்த பெண் SI ஒரு லோலங்கியாக இருந்திருப்பார்.இந்த உண்மையை புரிந்து கொள்ளாத அந்த ஆண் SI அவர் பின்னாடி சுற்றியது வேண்டாத செயல்.இப்போது இது ஒரு தலைக்காதலாம்.ஆமாம் அது என்ன காதல்..
Rate this:
Ramesh - Bangalore,இந்தியா
08-பிப்-202015:34:56 IST Report Abuse
Rameshஎண்ணம் போல எழுத்துக்களும்/சிந்தனைகளும் .......
Rate this:
Ray - Chennai,இந்தியா
09-பிப்-202001:52:37 IST Report Abuse
RayYES HE HAS INTRODUCED HIMSELF AS AN IMPOTENT BY ASKING "WHAT IS LOVE?"...
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
08-பிப்-202014:58:20 IST Report Abuse
s.rajagopalan தீபக் மீது வழக்கு தவிர்க்கப்பட்டது ...ப்ரீதீயின் பெற்றோர் தீபக்கிற்கு மரண தண்டன கொடுக்கவேண்டும் என்று போராடவும் தேவையில்லை .... மனா சாட்சி தீபக்கை கொன்றிருக்கலாம்...யில்லை சிறை வாசம் என்று நினைத்திருக்கலாம் ...பத்திரிகைகளுக்கு தீனி போச்சு ...நமக்கு பொழுது போக ஒரு வாய்ப்பு போச்சு....
Rate this:
Cancel
08-பிப்-202014:16:11 IST Report Abuse
தமிழ் படத்தைப்பார்த்தால் காதலர்கள்போல் தெரிகிறது. என்னதான் பிரச்னை என்றாலும் கொலை செய்வதைஎல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X