அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏமனில் தவிக்கும் தமிழக நர்ஸ்கள்: மீட்க விஜயகாந்த் கோரிக்கை

Updated : மே 29, 2011 | Added : மே 27, 2011 | கருத்துகள் (5)
Share
Advertisement

சென்னை: ""ஏமன் நாட்டில் நடக்கும் உள்நாட்டு கலவரத்தால், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழக நர்சுகளை மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: ஏமன் நாட்டில், அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகக் கோரி, எதிர்க் கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபருக்கு ஆதரவாக, ராணுவமும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக, பழங்குடியினரும், உள்நாட்டு கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ராணுவ மருத்துவமனையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த தமிழக நர்ஸ்கள், அதிகளவில் பணியாற்றுகின்றனர். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், ராணுவ முகாமையும், மருத்துவமனையையும் தாக்கி வருகின்றனர். இதனால், தமிழக நர்ஸ்கள் உணவு, உறக்கம் இன்றி, கடந்த சில நாட்களாக உயிரை கையில் பிடித்துள்ளனர். தங்கள் சிகிச்சைக்காக, இந்த நர்சுகளை, ராணுவமும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மருத்துவமனையில் தொடர்ந்து இருந்தால், நர்சுகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையுள்ளது. இதனால், அவர்களது உறவினர்கள், கண்ணீரும், கம்பலையுமாக தமிழகத்தில் உள்ளனர். எனவே, தமிழக நர்சுகளை மீட்கவும், அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரவும் மத்திய அரசு உடனே தீவிரமாக ஈடுபடவேண்டும். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karuna - gobi,இந்தியா
01-ஜூன்-201114:38:44 IST Report Abuse
karuna வெறும் அறிக்கை விடுவதால் பயன் இல்லை நடவடிக்கை எடு இல்லை என்றால் மத்திய அரசாங்கத்தின் அலுவலங்களை முற்றுக்கை இடுவோம் என்று கூற வேண்டும் திரு. விஜயகாந்த் அவர்களே
Rate this:
Cancel
sathishwaran - Chennai,இந்தியா
30-மே-201108:03:43 IST Report Abuse
sathishwaran இங்குள்ள பிரச்சனைகளை விட்டுவிட்டு, அதென்ன ஏமனில் உள்ள நர்சுகளின் மீது தனி பற்று?
Rate this:
Cancel
Sundar - Bangalore,இந்தியா
28-மே-201103:03:50 IST Report Abuse
Sundar விஜயகாந்த் ஒரு நல்ல அரசியல் தலைவர் என்பதை நிரூபித்து இருக்கிறார் .. நல்ல முதிர்ச்சி... வாழ்த்துக்கள் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X