பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலருக்கு விருது

Added : பிப் 08, 2020
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலரின், கல்வி, சமூகப் பணியை பாராட்டி, கோவை கல்வி நிறுவனம், விருது வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், 56. அவர், கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர். அங்குள்ள கல்வியியல் கல்லூரியில், 1983-85ல், பி.எட்.,- எம்.எட்., பட்டங்கள் பெற்றார். கல்லூரி நிர்வாகம், ஆண்டு தோறும், சிறந்த முன்னாள் மாணவர்கள், மூன்று பேருக்கு, விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, கோவையில் சமீபத்தில், வித்யாலயா முன்னாள் மாணவர்கள் தினவிழா நடந்தது. அதில், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமாரின் கல்வி, சமூகப் பணியை பாராட்டி விருது வழங்கப்பட்டது. ராமகிருஷ்ண மடம் சேவாஸ்ரமம், ஸ்ரீமத் சுவாமி தன்மயானந்ஜி மகராஜ் இந்த விருதை வழங்கி பாராட்டினார். கலெக்டர் மெகராஜ், எஸ்.பி., அருளரசு ஆகியோரை நேரில் சந்தித்து, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் வாழ்த்து பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X