பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : பிப் 08, 2020
Advertisement

முட்புதரால் இடையூறு: பள்ளிபாளையம் ஒன்றியம், ஆவத்திபாளையம் அடுத்த ராமகிருஷ்ணா நகரில் குடியிருப்பு பகுதியில் செல்லும் சாலையோரத்தில் முட்புதர் வளர்ந்து, மையப்பகுதி வரை வந்து விடுகிறது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் கவனக் குறைவாக சென்றால் காயம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. முட்புதரை அகற்றி, சாலையை பராமரிப்பு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
வாகனம் நிறுத்தம்; போக்குவரத்து பாதிப்பு: குமாரபாளையம், சேலம் சாலை போக்குவரத்து அதிகம் நடைபெறும் பகுதியாகும். ஆர்.ஏ.எஸ்., தியேட்டர் பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. இங்குள்ள கடைகளின் முன் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு, விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இது போல், பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வாகனங்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மண்சாலை மக்கள் அவதி: எலச்சிபாளையம் ஒன்றியம், மணலிஜேடர்பாளையம் அண்ணாநகரில் குடியிருப்புகள் அருகே பல வருடங்களாக மண்சாலை உள்ளது. பலத்த காற்று வீசும்போது, சாலையில் படிந்திருக்கும் புழுதி மண் குடியிருப்புகளுக்குள் புகுந்து நாசம் செய்து விடுகிறது. அதுமட்டுமின்றி, மழைக் காலங்களில் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறி காட்சியளிக்கிறது. பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாய்காலில் முட்புதர் அகற்றப்படுமா? எலச்சிபாளையம் ஒன்றியம், திம்மராவுத்தம்பட்டியில் இருந்து உஞ்சனைக்கு செல்லும் வாய்க்காலில் பல மாதங்களாக முட்புதர் ஆக்கிரமித்துள்ளது. இதனால், தண்ணீர் வரத்து தடைபட காரணமாய் உள்ளதுடன், விஷ ஜந்துகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. அருகில் வசிப்பவர்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, முட்புதரை அகற்ற, சம்பந்தப்பட்ட பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி பாலத்தில் தடுப்பு தேவை: குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே பவானியை இணைக்கும் பழைய காவிரி பாலம் உள்ளது. இந்த பாலத்தில் சாலை அதிக பள்ளங்களுடன் போக்குவரத்திற்கு பயனற்றதாக உள்ளது. மேலும் பாலத்தின் மையப்பகுதியில் பக்கவாட்டில் இரும்பு தடுப்புகள், இடைவெளியில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இது பல மாதங்கள் முன்பே பழுதாகி உடைந்து கீழே விழுந்துவிட்டது. நடந்தும், வாகனத்தில் செல்வோருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X