பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 10ல் முதல்வர் கோப்பை: விளையாட்டுப் போட்டிகள்

Added : பிப் 08, 2020
Share
Advertisement

நாமக்கல்: முதல்வர் கோப்பைக்கான தடகளம், நீச்சல், ஜூடோ, குத்துச்சண்டை, இறகுப் பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, கபடி, டென்னிஸ், கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகள், வரும், 11ல், நடக்கின்றன.

தடகளம் (ஆண்கள்), 100 மீ., 200 மீ., 400 மீ., 400 மீ., தடை ஓட்டம், 1,500 மீ., 10 ஆயிரம் மீ., ஓட்டம், போல் வால்ட், நீளம் தாண்டுதல், சுத்தி எறிதல், ஈட்டி எறிதல்.


தடகளம் (பெண்கள்), 100 மீ., 200 மீ., 800 மீ., 1,500 மீ., 5,000 மீ., ஓட்டம், போல் வால்ட், நீளம் தாண்டுதல், சுத்தி எறிதல், ஈட்டி எறிதல். தடகளப் போட்டிகள், வரும், 11 காலை, 8:00 மணிக்கு, நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரியில் நடக்கிறது.


நீச்சல் (ஆண்கள்), 100 மீ., பேக் ஸ்ட்ரோக், 100 மீ., ப்ரஸ்ட் ஸ்ட்ரோக், 100 மீ., பட்டர்பிளை, 200 மீ., பட்டர்பிளை, 200 மீ., பேக் ஸ்ட்ரோக், 200 மீ., ப்ரஸ்ட் ஸ்ட்ரோக், 400 மீ., இண்டுவிஜூவல் மெட்லி, மற்றும் 1,500 மீ., பிரீ ஸ்டைல்.

நீச்சல் (பெண்கள்), 100 மீ., பேக் ஸ்ட்ரோக், 100 மீ., ப்ரஸ்ட் ஸ்ட்ரோக், 100 மீ., பட்டர்பிளை, 200 மீ., பட்டர்பிளை, 200 மீ., பேக் ஸ்ட்ரோக், 200 மீ., ப்ரஸ்ட் ஸ்ட்ரோக், 400 மீ., இண்டுவிஜூவல் மெட்லி மற்றும் 800 மீ., பிரீ ஸ்டைல். நீச்சல் போட்டிகள், வரும், 11 காலை, 8:00 மணிக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட நீச்சல் குளத்தில் நடக்கிறது.

குழுப் போட்டிகள்: இறகுப் பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.


ஜூடோ (ஆண்கள்): 60 கிலோ, 66 கிலோ, 73 கிலோ, 81 கிலோ, 90 கிலோ, 100 கிலோ மற்றும் 100 கிலோ. (பெண்கள்): 48 கிலோ, 52 கிலோ, 57 கிலோ, 63 கிலோ, 70 கிலோ, 78 கிலோ மற்றும் 78 கிலோ.

குத்துச் சண்டை (ஆண்கள்): 49 கிலோ, 49-52 கிலோ, 52-56 கிலோ, 56-60 கிலோ, 60-64 கிலோ, 64-69 கிலோ, 69-75 கிலோ, 75-81 கிலோ, 81-91 கிலோ மற்றும் 91 கிலோவுக்கு மேல்.


குத்துச்சண்டை (பெண்கள்): 48 கிலோ, 48-51 கிலோ, 51-54 கிலோ, 54-57 கிலோ, 57-60 கிலோ, 60-64 கிலோ, 64-69 கிலோ, 69-75 கிலோ, 75-81 கிலோ மற்றும் 81 கிலோவுக்கு மேல்.


குழுப் போட்டிகள்: கூடைப்பந்து (ஆண்கள், பெண்கள்), ஹாக்கி (ஆண்கள், பெண்கள்), கபடி (ஆண்கள், பெண்கள்), டென்னிஸ் (ஆண்கள், பெண்கள்), கையுந்து பந்து(ஆண்கள், பெண்கள்).


இவை, வரும், 10 காலை, 8:00 மணிக்கு, பாவை பொறியியல் கல்லூரியில் நடக்கிறது. போட்டியில் கலந்து கொள்பவர்கள், நுழைவு விண்ணப்ப படிவங்களை, www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 2019, டிச., 31ல், 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு முறையே, 1,000, 750, 500 ரூபாய் பரிசுத் தொகை, வங்கியில் செலுத்தப்படும். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X