பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்வீடன் பெண்ணை கரம் பிடித்த தமிழர்

Added : பிப் 08, 2020
Share
Advertisement

நாமக்கல்: ஜாதி, மதம், இனம், மொழி, நாடுகடந்து, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பெண்ணை, தமிழர் கரம் பிடித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த சாணார் பாளையத்தை சேர்ந்தவர் சண்முகவேல் - தமிழரசி தம்பதியரின் மகன் தரணி, 29; எம்.எஸ்., பட்டதாரி. ஸ்வீடன் நாட்டில், இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், எம்.எஸ்., படிக்க அங்கு சென்றார். ஸ்டாக்ஹோம் பகுதியைச் சேர்ந்த மரினா சூசேன், 29, என்பவரை, கூடைப்பந்து விளையாடச் சென்ற இடத்தில் சந்தித்துள்ளார். நண்பர்களாக பழகி வந்த இவர்களிடையே, காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். அதற்கு, இரு வீட்டாரும் சம்மதித்தனர். அதையடுத்து, தரணி வீட்டார் விருப்பத்தின் பேரில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், நேற்று திருமணம் நடந்தது. ஒருவருக்கு ஒருவர் மாலைமாற்றியும், தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் அணிவித்தும் திருமணம் செய்து கொண்டனர். பெண்வீட்டார் உறவினர்கள் பட்டு வேட்டி, சட்டை மற்றும் பட்டு சேலை அணிந்து வந்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X