அரசியல் செய்தி

தமிழ்நாடு

எனது பாடலை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல் செய்யலாமே? கருணாநிதி

Added : மே 27, 2011 | கருத்துகள் (131)
Share
Advertisement
எனது பாடலை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல் செய்யலாமே? கருணாநிதி

சென்னை: "நான் எழுதிய பாடல் சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டத்தில் இடம்பெறுவதை விரும்பவில்லை என்றால், அதை எடுத்துவிட்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்தலாமே?' என, முன்னாள் முதல்வர் கருணாநிதி, அரசுக்கு கேள்வி எழுப்பிஉள்ளார்.


அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமச்சீர் கல்வியை அமல் செய்ய, சமச்சீர் கல்வி முறை அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. பள்ளி கல்வித் துறை அமைச்சர் தலைமையில், கல்வியாளர்களிடம் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அதன்படி, 2010 - 2011 கல்வி ஆண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு வரையும், 2011-12 கல்வி ஆண்டில் எஞ்சிய வகுப்புகளுக்கும், சமச்சீர் கல்வியை அமல் செய்யலாம் என, முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, சமச்சீர் கல்விச் சட்டத்தை தள்ளுபடி செய்ய தொடரப்பட்ட வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், "பாடத்திட்ட நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும். தனியார் பதிப்பகம் வெளியிடும் பாடப் புத்தகங்களை ஏற்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, பாடத்திட்ட நெறிமுறை வெளியிடப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடத்திட்டங்கள் வழங்கப்பட்டு, கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி அமல்செய்யப்பட்டது.


சமச்சீர் கல்வி முறைக்கு, சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தடை கோரி செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அரசின் கொள்கை முடிவுப்படி, இரண்டு முதல் 10ம் வகுப்புகளுக்கு (6ம் வகுப்பு தவிர) 200 கோடி ரூபாய் செலவில் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, 2011-12ம் கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை அமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு கட்டமாக பணிகளை மேற்கொண்டு, சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. சமச்சீர் கல்வியை கைவிடுவது, மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. சமூகநீதியை நிலைநாட்ட கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை தள்ளி வைப்பது, விவாதத்தைக் கிளப்பியுள்ளது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. சமச்சீர் கல்வி முறை ரத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில், வல்லுனர்களைக் கொண்டு ஆராய்ந்து கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை எளிதில் புறக்கணித்துவிட முடியாது. இதுபற்றி, அரசுக்கு அட்வகேட் ஜெனரல் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.


இந்நிலையில், சமச்சீர் கல்வி முறையை எதிர்ப்பது, தி.மு.க., கொண்டு வந்த திட்டம் என்பதால் மட்டுமே என புரிந்து கொள்ள முடிகிறது. இதைத் தவிர வேறு காரணம் என்ன கூறமுடியும்? ஒருவேளை, தொல்காப்பியம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, குண்டலகேசி, ராமாயணம் பேன்ற இலக்கியங்களை இணைத்து, நான் எழுதிய பாடல், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் இருப்பதால் சமச்சீர் கல்வியை விரும்பவில்லையா? அப்படி இருந்தால், அந்தப் பாடலை எடுத்துவிட்டு சமச்சீர் கல்வியை அமல் செய்யலாமே? இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து (131)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan. S - Pudukkottai,இந்தியா
28-மே-201117:21:19 IST Report Abuse
Natarajan. S தமிழ்நாடு இருவரது அத்சிக்கலத்திலும் சமச்சீர் (கேடு) அடைவதை தடுப்பது யாரோ? இறைவா!
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
28-மே-201116:39:51 IST Report Abuse
muthu Rajendran கல்வித்துறையில் நிறைய சாதனை செய்வதாக நினைத்து கொண்டு பிரச்சனைதான் உண்டு பண்ணினார்கள்: சான்று தனியார் பள்ளிகளுக்கு கட்டணம், நிர்ணயம். அதற்கென்று ஒரு குழு; ஆனால் அதற்கு எந்த அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசு நிபந்தனைகள் ஏதும் விதிக்கவில்லை. உடனே அந்த குழு தலைவர் சென்ற வருட பள்ளியின் மொத்த செலவை 12 ஆல் வகுத்து அதை மீண்டும் மொத்த மாணவர்கள் என்னிக்காயயல் வகுத்து அது தான் கட்டணம் என்றார். ஒரு வருட செலவே அடுத்த மூன்று ஆண்டு களுக்கும் வருமா என்று யாரும் எண்ணி பார்க்கவில்லை. பெரிய பள்ளிகளில் தான் படிக்க வைக்க வேண்டும் என்றுள்ள ஒரு சில பெற்றோர்கள் (எல்லோரும் என்று சொல்ல மாட்டேன்)கட்டணம் குறைவதில் மகிழ்வு அடைந்தார்கள். ஆனால் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்தது. ஒரு சில பெற்றோர்கள் குறிப்பிட்ட சில பள்ளிகள் முன் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அரசு உண்மையில் அக்கறை இருந்தால் சரியான தகுதிகள் இருக்கும் பள்ளிகளை மட்டுமே அனுமதித்து பொறியியற் கல்லூரி கட்டணம் போல் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயம் செய்திருக்கலாமே? வாக்குகள் பெறுவதையே நோக்கமாக வைத்து இதில் ஒரு சாதனை என்று தம்பட்டம் அடித்தார்கள் கடைசியில் அது வெட்டியாக போனது. LKG கே 36000 ரூபாய் வாங்கும் பள்ளிகள் இல்லையா ? அது முன்னாள் அரசிற்கு தெரியாதா? சமசீர் கல்வி என்றால் என்ன? பிளஸ் டூ வரை மாநிலத்தில் ஒரே மாதிரியான பாடதிட்டம் வேண்டும் அதுதானே.?பத்தாம் வகுப்பு வரையில் உள்ள நான்கு பாடத்திட்டங்களில் மெட்ரிக் பாடத்திட்டம் தான் அதிக தரமானது. பிறகென்ன மெட்ரிக் பாடத்திட்டத்தையே எல்லோருக்கும் வைக்க வேண்டியது தானே. அதென்ன நாலு திட்டங்களையும் இணைத்து "ஒரு " மாதிரி பாடத்திட்டம். பாடத்திட்டம் ஒரே மாதிரியாக ஆக்கபட்டாலும் தரம் என்பது பள்ளிக்கு பள்ளி வித்தியாசப்படும் தானே.! ஒரு பள்ளியின் கல்வி தரம் ஆசிரியர் ஆற்றல் ,மாணவர் முயற்சி, பெற்றோர்கள் ஒத்துழைப்பு ஆகியவற்றை கொண்டு அமைவது. தயவு செய்து கல்வி சம்பந்த பட்ட பிரச்சனயை கல்வியாளர்களிடம் முழுவதுமாக விடுங்கள். அதில் அரசியலை கொண்டு வராதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
B.Madhavan, N.G.O. WING, B.J.P. - chennai ,இந்தியா
28-மே-201116:24:04 IST Report Abuse
B.Madhavan,   N.G.O. WING, B.J.P. ஒரு புதிய சட்டமும், திட்டமும் கொண்டு வரவேண்டுமென்றால் சட்டசபையின் எதிர்கட்சி ஆதரவோடு செய்ய வேண்டும் என்று கருணாநிதிக்கு தெரியாதா? அதுவும் மைனாரிட்டி அரசாங்கம் நடத்திய கருணாநிதி பலமான எதிர்கட்சியான அ.தி.மு.க. உதவியின்றி இதை செய்தது எந்த விதத்தில் சரியாகும்? அப்படி தன்னிச்சையாக செய்ய இவருக்கு என்ன தகுதி உள்ளது. கழுதை கெட்டு கட்டெறும்பான இவர் இப்பொழுது புலம்புவது எதற்கு? மெஜாரிட்டி அரசு என்ன திட்டம் கொடு வருகிறதோ அதை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பதை சட்ட மன்றத்தில் ஏன் செய்ய கூடாது? மக்கள் குரலே மகேஷன் குரலாகும் என்பது கருணாநிதிக்கு தெரியாதா? ப. மாதவன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X