
தைப்பூசம் என்றாலே முருகன் கோவில்களில் கொண்டாட்டம்தான் சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவர் கோயிலில் விசேஷமாக கொண்டாடப்பட்டது.

பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி,பால் காவடி உள்பட பலவிதமான காவடிகள் சுமந்து,பூக்குழியில் இறங்கி தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.

சிறுவர்களும்,சிறுமிகளும் கூட காவடி எடுத்து முருகன் புகழைப் பாடியபடி வந்த காட்சி அற்புதம்.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் பழநி ஆண்டவரை சிரமமின்ற தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.தக்கார் எல்.ஆதிமூலம் தானே பல மணி நேரம் நின்று பக்தர்கள் வரிசையை ஒழுங்குபடுத்திக் கொண்டு இருந்தார்.

மூத்த பக்தர்கள் சிலர் தங்கள் முதுகில் இரும்பு கொக்கிகளை மாட்டிக்கொண்டு சுவாமி தேரை இழுத்துச் சென்றது பார்த்தவர்களை மெய்சிலிர்க்கவைத்தது.

எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE