பொது செய்தி

தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி மீது குறை சொல்லக்கூடாது: முதல்வர்

Updated : பிப் 08, 2020 | Added : பிப் 08, 2020 | கருத்துகள் (86)
Advertisement
tnpsc, cm, Edapadipalanisamy, dindigulsrinivasan, திண்டுக்கல்சீனிவாசன், டிஎன்பிஎஸ்சி, முதல்வர் இபிஎஸ், எடப்பாடிபழனிசாமி

இந்த செய்தியை கேட்க

கோவை : டி.என்.பி.எஸ்.சி., என்பது தன்னாட்சி அமைப்பு. அதன் மீது பொத்தாம்பொதுவாக குறை சொல்லக்கூடாது என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த முதல்வர் இ.பி.எஸ்., கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., தன்னாட்சி பெற்ற அமைப்பு. தேர்வில் முறைகேடு செய்தவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது. தவறு செய்தவர்கள் மீது டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அமைப்பு மீது பொத்தாம் பொதுவாக குறைக்கூறக்கூடாது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் நடத்துவது அவரது விருப்பம்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு வயதாகி விட்டது. 70 வயது ஆகிறது. இதனால், அவரால் குனியமுடியவில்லை. பேரனாக நினைத்து தான் காலில் குத்திய குச்சியை எடுக்க சொன்னார். உள்நோக்கத்துடன் செய்யவில்லை. இந்த விவகாரத்தை மீடியாக்களும், பத்திரிகைகளும் பெரிதுபடுத்துவது வேதனை அளிக்கிறது.தமிழகத்தில் வறட்சி என்பது இல்லை. நன்றாக மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பியுள்ளது.

அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால், மாணவர்களின் திறனையும், தகுதியையும் எப்படி அறிய முடியும். மாணவர்களின் தகுதியை அறியவே தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து தேர்வையும் ரத்து செய்து விட்டால், மாணவர்கள் வெளியூர் செல்ல முடியாது. இங்கேயே தான் இருக்க வேண்டும். இடைநிற்றலை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uthiran - chennai,இந்தியா
09-பிப்-202016:14:31 IST Report Abuse
Uthiran மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்தபோது அன்றய முதல்வர் CMDA பற்றி சொன்னதும் இதே கருத்துதான்.
Rate this:
Share this comment
Cancel
Sundar - Madurai,இந்தியா
09-பிப்-202011:24:39 IST Report Abuse
Sundar Unjustified. Government and related ministers closed their eyes for the past 20 years as well the administration. CPCID placed proofs and evidences and arrested the culprits. It is affected the the ambitious youngsters who have dreams and their life earning desire.
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
09-பிப்-202010:40:43 IST Report Abuse
Varun Ramesh 'டி.என்.பி.எஸ்.சி., மீது குறை சொல்லக்கூடாது', - சரி. யார்மீது குறை சொல்லலாம் என்பதையும் நீங்களே சொல்லிவிடுங்கள், எதிர் கட்சி என்பதை தவிர.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X