சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

மத்திய அரசு அதிகாரிகளை அவமதித்ததாக சர்ச்சை!

Added : பிப் 08, 2020
Advertisement
 மத்திய அரசு அதிகாரிகளை அவமதித்ததாக சர்ச்சை!

''பழைய நினைவுகளை பதிவு பண்ணியிருக்காருங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.

''யாரைச் சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''அ.தி.மு.க., மீனவர் அணி மாநில செயலரா இருக்கிறவர், எம்.சி.முனுசாமி... இவரது பிறந்த நாளை ஒட்டி, ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன், முகநுால் பக்கத்துல வாழ்த்து போட்டிருந்தாருங்க...

''அதுல, 'கிழக்கு கடற்கரை சாலை வழியா, ஜெயலலிதா கார்ல போறப்ப, வழியில முனுசாமியை பார்த்தாங்கன்னா, காரை நிறுத்தி, நலம் விசாரிப்பாங்க... '2016 தேர்தல்ல, முனுசாமிக்கு, 'சீட்' தரணும்'னு சொல்லியிருந்தாங்க...

''ஆனா, முனுசாமி வசிக்கிற சோழிங்கநல்லுார் தொகுதியை, வேற ஒருத்தருக்கு ஒதுக்கிட்டாங்க... அப்புறமா, நான் நினைவுபடுத்தினதும், பக்கத்துல இருக்கிற வேளச்சேரியை, முனுசாமிக்கு ஒதுக்குனாங்க'ன்னு பதிவிட்டிருக்காருங்க...

''இதைப் படிச்ச பலரும், 'கட்சி விசுவாசிகளை மறக்காத ஜெயலலிதா'ன்னு பாராட்டிட்டு இருக்காங்க... ஆனா, அந்த தேர்தல்ல, முனுசாமி தோத்துட்டாருங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

''கமல் கட்சி கதையை கேளுங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அன்வர்பாயே தொடர்ந்தார்...

''மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், மாநிலம் முழுக்க, அரசியல் சுற்றுப்பயணம் போகப் போறாராம்...

''அந்தக் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளை போன்ல அழைச்சு, 'கமல் வர்றப்ப, பல ஆயிரக்கணக்குல மக்களை திரட்டணும்'னு சொல்லியிருக்காங்க பா...

''அவங்களும், 'அதுக்கென்ன பிரமாதமா பண்ணிரலாம்... தலைக்கு இவ்வளவுன்னு, பணம் குடுத்துட்டீங்கன்னா போதும்'னு சொல்லிட்டாங்க... தலைமை நிர்வாகிகளோ, 'கமல்கிட்ட கேட்டுச் சொல்றோம்'னு போனை வச்சவங்க, தொடர்பு எல்லைக்கு அப்பால போயிட்டாங்க பா' என்றார், அன்வர்பாய்.

''மத்திய அரசு அதிகாரிகளை அவமானப்படுத்திட்டா ஓய்...'' என, கடைசி மேட்டரை ஆரம்பித்தார், குப்பண்ணா.

''யாருப்பா அவங்க...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''ஜனவரி, 26ம் தேதி, சென்னை, கடற்கரை சாலையில, குடியரசு தின விழா நடந்துந்துதோலியோ... கவர்னர், முதல்வர், நீதிபதிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள்னு, நிறைய பேர் கலந்துண்டா ஓய்...

''ஐ.ஆர்.எஸ்.,னு சொல்லப்படுற மத்திய அரசின் வருவாய் துறை அதிகாரிகளும் கலந்துண்டா... இவா, மாநில அரசின் தலைமைச் செயலர் அந்தஸ்துக்கும் மேலான அதிகாரிகள்...

''இவாளுக்கு, முதல் வரிசையில இருக்கைகள் ஒதுக்கியிருக்கணும்... ஆனா, சமீபகாலமா மத்திய அரசு தரப்புல இருந்து, தமிழகத்துல அடிக்கடி ரெய்டுகள் நடத்துறதால, மத்திய அரசு அதிகாரிகள் மேல, மாநில அரசு அதிகாரிகள் கடுப்புல இருக்கா ஓய்...

''அந்த கோபத்தை மனசுல வச்சுண்டு, ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளுக்கு, கடைசி வரிசையில இருக்கை ஒதுக்கியிருக்கா... அதுவும் இல்லாம, 'ஸ்நாக்ஸ், கூல்டிரிங்க்ஸ் சப்ளை' செய்றப்பவும், வேண்டாத விருந்தாளிகளுக்கு தர்ற மாதிரி அலட்சியமா நடந்திருக்கா...

''வெறுத்து போன, ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள், குடியரசு தின விழாவுல, பிரச்னை செய்ய வேண்டாம்னு, எல்லாத்தையும் பொறுத்துண்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.


ஹிந்துக்கள் ஓட்டுகளை அள்ள தி.மு.க., வியூகம்!


''இயக்குனர் பிடிவாதத்தால, நடிகைக்கு சான்ஸ் குடுத்திருக்காங்கபா...'' என, அரட்டையை ஆரம்பித்தார், அன்வர் பாய்.''சினிமா தகவலா... சீக்கிரமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''நடிகர் அஜித்தின் ஆஸ்தான டைரக்டர் சிறுத்தை சிவா, இப்ப, ரஜினி படத்தை இயக்கிட்டு

இருக்கார்... அதை முடிச்சிட்டு, மறுபடியும் அஜித் படத்துக்கு வராரு பா...''ஏற்கனவே, அஜித், நயன்தாரா நடிச்ச விஸ்வாசம், 'ஹிட்'டுங்கிறதால, புது படத்துலயும்

நயன்தாராவை, 'புக்' பண்ணும்படி, தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லிட்டார்...''ஆனா, 'அவங்களுக்குன்னு தனியா ரசிகர்கள், தியேட்டருக்கு வரப் போறது இல்லை... நடிகரை பார்க்க தான் வருவாங்க... ஆனாலும், இயக்குனரின் பிடிவாதத்தால, நடிகைக்கு, கோடிக்கணக்குல சம்பளம் குடுக்க வேண்டியிருக்கு'ன்னு தயாரிப்பு தரப்பு புலம்பிட்டு இருக்கு பா...'' என்றார், அன்வர்பாய்.சில நாட்களுக்கு பின், பெஞ்சில் அங்கம் வகித்த, கோவை கோவாலு, ''அ.தி.மு.க., சரிப்பட்டு வராம தான், தி.மு.க., பக்கம் போயிட்டாருங்களாமா...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார்.''யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை தான் சொல்றேங்ணா... ஆரம்பத்துல, கமல்கிட்ட வேலை செஞ்சாப்புல...''யாருக்கும் புரியாமலேயே பேசுற அவரை ஜெயிக்க வைக்கிறதும், மலையை கெல்லி எலியை பிடிக்கிறதும், ஒண்ணுதான்னு புரிஞ்சு, போன சுவடு தெரியாம வந்துட்டாருங்ணா...''அப்புறமா, அ.தி.மு.க., பக்கம் போனவர், 'முதல்வர் வேட்பாளர் யார்னு அறிவிக்கணும்...

கட்சியை ஒருத்தர் கட்டுப்பாட்டுல கொண்டு வரணும்'னு நிபந்தனை விதிச்சாருங்களாமா...''இதை, அவங்க ஏத்துக்காம போகவே, தி.மு.க., பக்கம் திரும்பிட்டாரு... அதே நேரம், விட்ட குறை, தொட்ட குறையா, அ.தி.மு.க., பக்கமும், தொடர்ந்து பேசிட்டு, இருந்தாப்புலயாம்...''அதுக்கு முற்றுப்புள்ளி வைக்கோணும்னு தான், பிரசாந்த் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை, ஸ்டாலின் போட்டு உடைச்சுட்டாருங்களாமா...'' என்றார், கோவாலு.''இது சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குல்லா...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...''சமீபத்துல, தி.மு.க., சார்புல, உள்ளாட்சி தேர்தல்ல ஜெயிச்சவங்க மாநாடு, திருச்சியில

நடந்துச்சுல்லா... ஸ்டாலின், உதயநிதி கலந்துக்கிட்ட இந்த மாநாட்டின் துவக்கத்துல, குத்து விளக்கு ஏத்துனாவ வே... இதுவும், பிரசாந்த் கிஷோர் ஐடியா தான்...''தி.மு.க.,வுல இந்த மாதிரி எல்லாம் செய்ய மாட்டாவ... 'ஹிந்துக்களின் வழிபாடு முறைகளையும் கடைப்பிடிச்சா தான், அவங்க ஓட்டுகளை ஒட்டுமொத்தமா அள்ள முடியும்'னு பிரசாந்த் சொல்லியிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.''அப்ப, வர்ற விநாயகர் சதுர்த்தி, தீபாவளிக்கு எல்லாம், ஸ்டாலின்கிட்ட இருந்து வாழ்த்து வரும்னு சொல்லும் ஓய்...'' என சிரித்தபடியே குப்பண்ணா எழ, பெஞ்ச் கலைந்தது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X